முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா காங்கிரஸின் இரு துருவங்கள்... சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன?

கர்நாடகா காங்கிரஸின் இரு துருவங்கள்... சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன?

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

மதசார்பற்ற ஜனதா தளத்தில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியதால், இன்று வரை பல மூத்த தலைவர்களால் வெளி மனிதராகவே பார்க்கப்படுகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரிதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதற்கு, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் முக்கிய பங்காற்றினர். அதனால், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் போட்டியில் இருவரும் நேரடியாக மோதிக் கொள்ளும் சூழல் இருந்தது.

75 வயதான முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, 1948- ஆம் ஆண்டு பிறந்தவர். பாரதிய லோக் தளம் கட்சியில் அரசியல் வாழ்க்கை தொடங்கிய அவர், பின்னர் ஜனதா தளக் கட்சியில் இணைந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1983-ல் சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தொகுதியில் 5 முறை தேர்வான அவர் இருமுறை தோல்வியையும் தழுவியுள்ளார்.

சித்தராமையாவின் பலத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கோடு வலம் வருபவர். 2013 முதல் 2018 வரை முழு ஆட்சிக்காலத்தையும் நிறைவு செய்தவர் என்ற பெருமையையும் பெற்றவர். கர்நாடாகாவில் வெகு சில முதலமைச்சர்களே தங்களது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.

மேலும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.

பாஜக மற்றும் பிரதமர் மோடியை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர். ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சித்தராமையாவை வெளிப்படையாகவே அவர் ஆதரிக்கிறார்.

அனைவரையும் அணைத்துக்கொண்டு செல்லும் அவரது தன்மை, ஸ்திரமான ஆட்சி அளிக்கும் வல்லமை ஆகியவையாகும். இந்த குணங்களை கொண்டு, அவர், 2024 பொதுத் தேர்தலுக்குக்கு காங்கிரஸ் கட்சியை கட்டமைத்து அழைத்துச் செல்வார் என அக்கட்சி நம்புகிறது. மேலும் அவருக்கு போட்டியாக உள்ள டி.கே.சிவக்குமாரை போல எந்த வழக்கும் இல்லை.

கட்சியுடன் அமைப்பு ரீதியாக பெரிய தொடர்பு இல்லாத சித்தராமையா, 2018-ல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரவைப்பதில் தோல்வியடைந்தார். மதசார்பற்ற ஜனதா தளத்தில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியதால், இன்று வரை பல மூத்த தலைவர்களால் வெளி மனிதராகவே பார்க்கப்படுகிறார்.

சித்தராமையாவின் வயதும் அவரது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான கார்கே, ஜி. பரமேஸ்வரா உள்ளிட்டோரை ஒரே புள்ளியில் இணைப்பதும் சித்தராமையாவுக்கு சவாலான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

61 வயதான டி.கே.சிவக்குமாரோ காந்தி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர். மாணவர் பருவத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியின் தூணாக திகழ்பவர். சிவக்குமாரின் அமைப்பு ரீதியிலான பலம், கட்சியில் நிலவும் பிரச்னைகளை தீர்க்கும் திறன், சோந்து கிடந்த கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. கடின உழைப்பு ஆகியவை பெரும் பலங்களாக பார்க்கப்படுகின்றன. கர்நாடாகவில் லிங்காயத்தவர்களுக்கு அடுத்தப்படியாக உள்ள ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர்.

இதையும் பார்க்க:  கர்நாடகா தேர்தல்: ”அண்ணாமலை வருகை பாஜகவை வலுவிழக்கவே செய்தது..” - சசிகாந்த் செந்தில்

top videos

    சிவக்குமார் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. சொத்துக்குவிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சித்தராமையாவுடன் ஒப்பிடும்போது சிவக்குமாருக்கு வெகுஜன ஈர்ப்பும் அனுபவமும் குறைவு. பழைய மைசூர் பகுதியில் மட்டுமே செல்வாக்கு பெற்றவர். அதன் காரணமாக முதல்வர் போட்டியில் முன்னிலையில் இருந்துவந்தார் சித்தராமையா. தற்போது, தேசியத் தலைமையால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    First published:

    Tags: Karnataka Election 2023, Siddaramaiah