முகப்பு /செய்தி /இந்தியா / நான்கே நாட்களில் முடிவுக்கு வந்த காதல் திருமணம்... மனைவி கண் முன்னே காதலன் எடுத்த விபரீத முடிவு...!

நான்கே நாட்களில் முடிவுக்கு வந்த காதல் திருமணம்... மனைவி கண் முன்னே காதலன் எடுத்த விபரீத முடிவு...!

மாதிரி படம்

மாதிரி படம்

மருமகள் ரோலி மற்றும் அவளது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மகனை சித்திரவதை செய்ததாக தீரஜின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  • Last Updated :
  • Lucknow, India

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சர்வத் பூர் கிராமத்தில் வசிக்கும் 22 வயதான தீரஜ் மற்றும் அதே கிராமத்தில் வசிக்கும் ரோலி கிரி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவர் வீட்டிலும் சம்மதிக்காத நிலையில் மார்ச் 14ம் தேதி இருவரும் கிராமத்தில் இருந்து லக்னோ வந்து ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.  அதன் பிறகு, அவர்கள் லக்னோவிலுள்ள மடியான்வ், எல்டெகோ கிரீன் குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கத் தொடங்கினர்.

திருமணம் முடிந்து நான்கு நாட்கள் ஆன நிலையில் மார்ச் 18 அன்று தீரஜ்  திடீரென்று  மனைவி ரோலியை அறையில் வைத்து பூட்டிவிட்டு ஹாலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை பார்த்து கதவை உடைத்து தீரஜை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் ரோலி கூறுகிறார். ஆனால் அந்த மருத்துவமனையில் தீரஜின் மோசமான நிலையைக் கண்டு, அவரை பல்ராம்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், 2 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி தீரஜ் இறந்துவிட்டார்.

தீரஜ் தற்கொலை செய்து கொண்டதை அவரது மனைவி ரோலி தனது மாமனார் சுனிலுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தீரஜ் மற்றும் ரோலி இருவரின் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். மருமகள் ரோலி மற்றும் அவளது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மகனை சித்திரவதை செய்ததாக தீரஜின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த சித்திரவதைகளை தாங்க முடியாமல் தனது மகன் இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

top videos

    தீரஜின் காதல் திருமணத்துக்கு உறுதுணையாக இருந்ததற்காக தீரஜின் மைத்துனரும் தாக்கப்பட்டதாகவும், இதனால் தீரஜ் மனம் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணம் ஆன ஐந்தே நாட்களில்  மனைவி கண்முன்னே கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    First published:

    Tags: Love marriage, Lucknow S24p35, Suicide