இந்தியாவில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருந்தாலும், ஒரு மாநிலத்தில் தொன்மையான விழாக் கொண்டாட்டங்கள் என்று வரும் போது மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைவது வழக்கம். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையுடன் திகழும் நாடுகளில் முக்கியமானதாக உள்ளது இந்தியா. குறிப்பாக இந்துக்கள் கொண்டாடும் விழாக்களில் முஸ்லீம், கிறிஸ்துவ மக்கள் உதவி செய்து வழிபடுவது என்பது எதார்த்தமான ஒன்றாகிவிட்டது. இவ்வாறு மாறி மாறி ஒவ்வொரு சமூகத்தினரும் உதவிகள் செய்து வழிபாடுகளை நடத்துகின்றனர்.
இதுப்போன்று விழாக்கள் மட்டுமில்லாமது பல தொன்மையான வரலாற்று நிகழ்வுகளையும் விழாக்களாக கொண்டாடுகின்றனர் இந்திய மக்கள். இப்படித் தான் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பராம்பரிய காஜி மியா திருமண நிகழ்வில் அனைவரும் ஒன்றிணைந்துக் கொண்டாடினர். சுமார் 300 ஆண்டுகள் பழமையான வரலாற்றை திருமண நிகழ்வாக எப்படி கொண்டாடுகிறார்கள். விழாவில் என்ன சிறப்பு? ஏன் மக்கள் அனைவரும் இவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறார்கள்? என்பது பற்றி நாமும் அறிந்துக்கொள்வோம்.
காஜி மியாவின் திருமணம் குறித்த சுவாரஸ்சிய தகவல்கள்… மன்னர் காலத்தில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த பாரசீக பேரரசின் இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த காஜி மியா. முஸ்லீம் சமூகத்தின் மீது அதீத ஈடுபாடோடும் இருந்துள்ளார். இவரது திருமணம் ஜஹூரா பீபியுடன் என்ற பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்னரே அவர் போருக்கு அனுப்பப்பட்டதால், இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டது.
Read More : ரூ.1 கோடி ஜீவனாம்சம் கேட்ட இரண்டாம் மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற கணவர்.. பகீர் சம்பவம்
பாரம்பரியமான இந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டு வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் தங்களுக்கு கிடைப்பதாக எண்ணுகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள். இந்த விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசும் உள்ளூர் மக்கள், இந்த விழாவில் கலந்துக் கொண்டு வழிபடும் போது, தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்று நம்புகின்றனர்.
மேலும் சிலர் தங்களின் சிலர் குழந்தைகளுக்காக பிராத்தனை செய்கின்றனர். இதோடு பலர் நாள்பட்ட நோய் குணமாகும் படியும் இங்கு வந்து பிராத்தனை செய்கின்றனர். இதனால் சாந்திபூர் மலஞ்சா பகுதி முழுவதும் விழாக்கோலத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக இந்த 300 ஆண்டுகள் பழமையான காஜி மியாவின் திருமணத்தின் கதை பல்வேறு மதங்களின் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கும் இடமாக மாற்றுகிறது என்று சொன்னால் மிகையாகாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.