முகப்பு /செய்தி /இந்தியா / சித்தராமையா முதல் சி.டி.ரவி வரை... கர்நாடகா நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி விவரம்

சித்தராமையா முதல் சி.டி.ரவி வரை... கர்நாடகா நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி விவரம்

கர்நாடகா நட்சத்திர வேட்பாளர்கள்

கர்நாடகா நட்சத்திர வேட்பாளர்கள்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட நிகில் குமாரசுவாமி, சி.டி.ரவி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் ஷிகாவ்ன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான யாசிர் அகமது கான் பதானை விட, 35,978 வாக்குகள் அதிகம் பெற்று பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றுள்ளார்.

வருணா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா 1,19,430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சோமன்னா 73,424 வாக்குகளை பெற்றார்.

கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே சிவக்குமார் 1,41,117 வாக்குகளை பெற்றார். மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் நாகராஜு வெறும் 20,518 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தையும், பாஜக வேட்பாளர் அசோகா 19,524 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதன்மூலம் டி.கே சிவக்குமார் 1,21,595 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

சித்தாப்பூர் தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே 81,323 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மணிகந்தா ரத்தோட் 67,683 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா எடியூரப்பா 81,810 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் நாகராஜ கவுடாவிற்கு 67,312 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர் கோனி மலதேஸ் 8,101 வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.

சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி பாஜக வேட்பாளர் யோகேஸ்வரை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேநேரம், ராம்நகர் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் நிகில் குமாரசாமி காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

இதேபோன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து ஹூப்ளி, மத்திய தார்வாட் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

இதையும் படிக்க : கர்நாடகா தேர்தல் வெற்றி : ராகுல் காந்தியை விராட் கோலி பாராட்டினாரா..? உண்மை என்ன..?

சிக்மகளூருவில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி காங்கிரஸ் வேட்பாளர் தம்மையாவிடம் தோல்வியை தழுவினார். மேலும் பெல்லாரி தொகுதியில் பாஜகவின் ஸ்ரீராமுலு, காங்கிரஸ் கட்சியின் பி.நாகேந்திராவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் 105 வாக்கு வித்தியாசத்தில் காந்தி நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

First published:

Tags: BJP, Congress, Karnataka, Karnataka Election 2023