இந்தியா பல வரலாற்று சுவடுகளையும், நினைவுகளையும் தன்னக்கத்தே கொண்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் உணவு முதல் பழக்க வழக்கங்கள் வரை அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும். இருந்தப் போதும் சில விஷயங்கள் எப்போதும் தனித்துவமாகவும் பிரபலமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு உணவு முறையைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்துக்கொள்ளப்போகிறோம்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பிடித்தமான ஜிலேபி
மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கமர்புகூர் என்ற இடத்தில் தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்துள்ளார். இதனால் இந்த ஊர் இதற்கு மட்டுமில்லாமல், சில இனிப்பு வகைகளுக்கும் பிரபலமாகியுள்ளது. குறிப்பாக கமர்புகூர் ஜிலேபி சோயா பீன்ஸ் மற்றும் அரிசி மாவுக்கொண்டு தயாரிக்கப்படும் வெள்ளை பூந்தி. இந்த இனிப்புகள் ஒரு காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானவை என்பதால் உள்ளூர் திருவிழாக்கள் முதல் பிற முக்கிய விழாக்கள் மற்றும் திருமணங்கள் போன்ற முக்கிய நாள்களில் மக்கள் விரும்பி வாங்குவார்கள் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஏன் இந்த இனிப்பு பிடித்தது?
ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவ், மாணிக் ராஜா வீட்டிற்குச் சென்ற போது, அவருக்கு வயிறு நிறைந்திருந்தாலும், ஜிலேபி என்றால் சாப்பிடுகிறேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. எந்த சூழலிலும் இந்த வகை இனிப்பை சாப்பிடுவார் என்பதால்தான் இவருக்கு பிடித்தமானதாக கூறப்படுகிறது. இதனால்தான் நாங்கள் ஒவ்வொரு பண்டிகை காலங்களில் இந்த இனிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறுகின்றனர் கமர்புகூர் பகுதி மக்கள்.
Also see... உலகின் காஸ்ட்லியஸ்ட் சாண்ட்விச்.. விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க..!
கமர்கூர் ஜிலேபியின் தனித்துவம்
மற்ற ஜிலேபிகளை விட கமர்புகூர் ஜிலேபியில் தனித்துவமான சுவை உள்ளது. அரிசி தூள், ரம்பா கலாய் தூள் மற்றும் பேரிக்காய் மாவு ஆகியவற்றின் கலவையை கலந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் பொரிக்கப்படுகிறது. பின்னர் பொரித்த ஜிலேபியை சுமார் 45 நிமிடங்கள் சர்க்கரை பாகில் ஊற வைக்கப்படுகிறது, இந்த இனிப்பை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இது கோடைக்காலத்தில் ஒரு சுவையான விருந்தாக அமைகிறது.
வெள்ளை பூந்தி செய்முறை
சோயா பீன்ஸைக் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பலங்காரம் தான் வெள்ளை பூந்தி. இதற்கு முதலில் வெள்ளை பூந்தியை அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்ந்து கலந்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து கலக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எப்போதும் போல பூந்தியை பொரித்தெடுக்க வேண்டும்.
Also see... ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பழங்களை இலவசமாக வழங்கும் பாரத்பூர் விவசாயி!
இதையடுத்து சர்க்கரை பவுடரை கடாயில் எடுத்துக்கொண்டு சர்க்கரை பாகுவை காய்ச்சி எடுக்க வேண்டும். பின்னர் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள வெள்ளை பூந்தியை எடுத்து சிறிது நேரம் ஊற வைத்தால் போதும் சுவையான கமர்புகூர் வெள்ளை பூந்தி ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hooghly S25p28, Jalebi, Sweet recipes, West Bengal Assembly Election 2021