முகப்பு /செய்தி /இந்தியா / இனி ரயில் நிலையங்களில் போட்டோ ஷூட் நடத்தலாம்... கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

இனி ரயில் நிலையங்களில் போட்டோ ஷூட் நடத்தலாம்... கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

மாதிரி படம்

மாதிரி படம்

ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களில் வணிக ரீதியாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரயில் நிலையங்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், திருமண போட்டோ ஷூட் போன்ற வணிக நோக்கத்துடன் புகைப்படம் எடுக்கவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகரங்களில் நாள் ஒன்றுக்கு 10,000 ரூபாயும், சிறிய நகரங்களில் 5000 ரூபாயும், கிராமப்புறங்களில் 3000 ரூபாயும் உரிமம் பெற கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ரயில் பெட்டிகளில் படப்பிடிப்பு நடத்த கூடுதலாக ஒரு நாளுக்கு ரூ.1000 முதல் ரூ. 3000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, கல்வித் தேவைக்காக படம் பிடித்தாலும், புரஃபஷனல் கேமரா மூலம் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக படம் எடுத்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக நோக்கமின்றி, செல்போன் கேமரா அல்லது சிறிய டிஜிட்டல் கேமரா மூலம் படம் எடுக்க எந்த கட்டணமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய கேமராக்களில் ஊடகவியலாளர்கள் படம் பிடிக்கவும், சமூக நோக்கத்திற்காக தன்னார்வ அமைப்பினர் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவும் எந்த கட்டணமும் இல்லை என தெற்கு ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

First published:

Tags: Southern railway, Wedding Photoshoots