முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவில் தென் மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் தென் மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவகாற்று

தென்மேற்கு பருவகாற்று

Kerala | கேரளாவில் தென் மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். அந்த வகையில் அந்தமான் பகுதியில் மே 20ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது.

கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தொடங்குவது தாமதமானது.

இந்நிலையில், அரபிக் கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருவதால் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாகவும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க... திருப்பதியில் எளிதாக தரிசனம் செய்யனுமா? இதோ ஐஆர்சிடிசி கொடுத்த சூப்பரான பேக்கேஜ்

பருவமழை தாமதத்தால் தமிழ்நாட்டில் மே மாதத்தைவிட, ஜூன் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினால், தமிழ்நாட்டில் வெயில் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Kerala, Meteorological board, South west Monsoon rain