முகப்பு /செய்தி /இந்தியா / பல ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மண்ணில் பிறந்த சிவிங்கி புலி குட்டிகள்...!

பல ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மண்ணில் பிறந்த சிவிங்கி புலி குட்டிகள்...!

சிவிங்கி புலி குட்டிகள்

சிவிங்கி புலி குட்டிகள்

நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கி புலி 4 குட்டிகளை ஈன்றுள்ளது.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

நமீபியாவில் இருந்து கடந்தாண்டு பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்தியாவிற்கு 8 சிவிங்கி புலிகள் கொண்டுவரப்பட்டன. அதில் சியாயா என்ற பெண் சிவிங்கி புலிக்கு 4 குட்டிகள் பிறந்துள்ளது. நேற்று சாஷா என்ற பெண் சிவிங்கி புலி உடல்நல குறைபாட்டால் இறந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்ட நிலையில், இந்திய மண்ணில் சிவிங்கி புலி இனத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன் முதற்கட்டமாக நமீபியாவில் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் நேற்று ஒரு சிவிங்கி புலி இறந்த நிலையில் 7 சிவிங்கி புலிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சியாயா என்ற பெண் சிவிங்கி புலிக்கு 4 குட்டிகள் பிறந்த செய்தியை மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் இந்த நிகழ்வு வனவிலங்கு பாதுகாப்பில் வரலாறாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவிங்கி புலிகளை இந்தியாவிற்குக் கொண்டுவர உதவிய Project Cheetah குழுவைப் பாராட்டியுள்ளார்.

Also Read : கர்நாடக அரசியல்... ஒருமுறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்யாத பாஜக முதல்வர்கள்..!

top videos

    தொடர்ந்து, குட்டிகளின் புகைப்படங்களை இந்திய வனவிலங்கு துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் ட்விட்டரில் வெளியிட்டுப் பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் பிறந்த சிவிங்கி புலிக் குட்டிகள் என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் ஆப்ரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டன. இதனுடன் இந்தியாவில் மொத்தம் 19 சிவிங்கி புலிகள் மற்றும் 4 குட்டிகள் உள்ளன.

    First published:

    Tags: Madhya pradesh