இன்ஸ்டாகிராமை தனது வணிக தளமாக மாற்றி, அதன் மூலம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த சிம்ரன் என்ற இளம் பெண். ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு தயாரிப்புகளுக்கான சந்தையைக் கண்டறிந்து, விரிவுபடுத்துவதற்கான சிறந்த தளமாக சமூக ஊடகங்கள் மாறி வருகின்றன. இதனால்தான் பலர், கடைகளைத் திறப்பதற்குப் பதிலாக, தங்கள் தயாரிப்புகளை விற்க சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
முசாபர்பூரின் சிம்ரன் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தனது வணிக தளமாக மாற்றியவர்களில் ஒருவர். இன்ஸ்டாகிராம் பக்கம் பிசினஸ் செய்ய சிறந்த வழி என்று சிம்ரன் கூறுகிறார். சிம்ரன் பிசினிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்கிறார். பிசின் ஒரு திரவ வடிவத்தில் தயாரிக்கப்படக்கூடிய பொருளாக உள்ளது. மேலும் இது உறையும்போது திடப் பொருளாக மாறும். இந்த பிசின் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களை ஆன்லைனில் சிமரன் விற்பனை செய்து வருகிறார்.
இதுதொடர்பாக நியூஸ் 18 –க்கு அளித்த பேட்டியில் சிம்ரன் கூறியதாவது- நான் பி.எஸ்.சி. படித்துள்ளேன். ஆனால் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நான் மனதளவில் வர்த்தகத்தில் ஈடுபட தயாராக இருந்தேன். சொந்தமாக தொழில் தொடங்கும் முடிவில் நான் இருந்தேன். பிசின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் பொருளை வாடிக்கையாளர்கள் பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இதனால்தான் நான் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்துகிறேன். இதன் மூலம் நல்ல பிசினஸ் செய்ய முடியும். பீகாரில் மிகக் குறைவானவர்களே பிசின் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிம்ரன் ஒரு வருடத்திற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் வணிகப் பக்கத்தை உருவாக்கி அதற்கு டெக்கரேஷன் வில்லா என்று பெயரிட்டார். டெக்கரேஷன் வில்லா பக்கம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 100க்கும் மேற்பட்ட ஆர்டர்களை வழங்கியதாக அவர் கூறுகிறார். சிம்ரன் மேலும் கூறுகையில், தனது பிசின் தயாரிப்புகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும், சந்தையில் இந்த தயாரிப்புகளை மக்கள் விரும்புவதாகவும் கூறுகிறார். சமூக வலைதளங்களின் வழியே பொழுதைக் கழிக்கும் பலருக்கு மத்தியில் சிம்ரன் அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar