சத்யஜித் ரேயின் கற்பனை கதாபாத்திரமான பேராசிரியர் ஷங்குவின் ‘விதுசேகர்’ (Vidhusekhar) உங்களுக்கு நினைவிருக்கிறதா..? இந்த கற்பனை பாத்திரத்தை நிஜமாக்கி இருக்கிறார் மேற்குவங்கத்தில் இருக்கும் பாக்டோக்ரா (Bagdogra)-வை சேர்ந்த இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான தேபாசிஷ் தத்தா (Debasish Dutta).
இந்த மாணவருக்கு சிறுவயதில் 'புரொபஸர் கோன்' (Professor Cone) மிகவும் பிடித்த கதைகளில் ஒன்றாகும். மேலும் இவருக்கு பிடித்த கதாபாத்திரம் ‘விதுசேகர்’ . இங்கே மாணவர் உருவாக்கி இருக்கும் விதுசேகர் என்பது ஒரு ரோபோ ஆகும். இந்த விதுசேகரை மல்டி டாஸ்க்கிங் ரோபோவாக டிசைன் செய்து உயிர்ப்பித்து உள்ளார் மாணவர் தேபாசிஷ்.
ஆம் உண்மையில் இந்த ஒரு ரோபோ. இது பக்தோக்ராவைச் சேர்ந்த தேபாஷிஷ் தத்தாவால் தயாரிக்கப்பட்டது. இந்த ரோபோ தண்ணீர், உணவை எளிதில் டெலிவரி செய்ய கூடிய வகையில் இந்த மாணவரால் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரோபோ தண்ணீர் மற்றும் உணவை வழங்க மட்டும் அல்ல, நிகழ்வுகளில் பரிசுகளை வழங்க மற்றும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று விருந்தளிப்பதற்கும் கூட உதவுகிறது. இந்த ரோபோ மூலம் உங்கள் வேலை எளிதாக இருக்கும். ஆம், நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.
ப்ளூடூத் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்த ரோபோ, நம்முடைய அன்றாட பணிகளை மிகவும் எளிமையாக்க உதவும் என்கிறார் இதனை டிசைன் செய்திருக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான தேபாசிஷ் தத்தா தூக்கி எறியப்பட்ட வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி இந்த ரோபோவை சி-ப்ரோகிராமிங் மூலம் உருவாக்கி இருப்பதாக கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் மாணவர் தேபாசிஷ் தத்தா. சி-ப்ரோகிராமிங் மூலம் உருவாக்கி இருக்கும் இந்த ரோபோவிற்கு தன்னை சிறுவயது முதல் கவர்ந்த கற்பனை கதாபாத்திரமானான 'விதுசேகர்' என்று பெயரிட்டு உள்ளார் மாணவர் தேபாஷிஷ்.
ரோபோவை டிசைன் செய்துள்ளது குறித்த தகவல்களை ஷேர் செய்துள்ள மாணவர் தேபாசிஷ், “இந்த ரோபோவை முழுமையாக உருவாக்க எனக்கும் மொத்தம் 2 மாதங்கள் ஆனது. நான் ஒரு கடையில் இருந்து சில சர்க்யூட்களை வாங்கினேன், ஆனால் இந்த ரோபோவின் மீதமுள்ள பார்ட்கள் சுமார் 2000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது" என்று அவர் கூறி இருக்கிறார்.
இதற்கிடையே தனது எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல்களையும் கூறி இருக்கும் தேபாசிஷ், செயற்கை நுண்ணறிவு (AI - Artificial intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறந்த தரமான, உயர்தர ரோபோக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் கேமராக்கள் மற்றும் தடைகளை கண்டறியும் Obstacle-detection கெப்பாசிட்டி இருக்கும் என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் மாணவர் தேபாஷிஷ் சொந்தமாக ரோபோ தயாரிப்பு வணிகத்தை உருவாக்க ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் தனது படைப்புகளை சமூகத்திற்கு வழங்க முடியும் என்று நம்புகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Artificial Intelligence, Robo