கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக டெல்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அப்போது, டி.கே.சிவக்குமாரை பல்வேறு வகைகளில் காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். ஒரே ஒரு துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இருப்பார் என்றும், வரும் மக்களவைத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் அவர் நீடிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
#WATCH | Siddaramaiah will be the Chief Minister of Karnataka and DK Shivakumar will be the only deputy CM, announces KC Venugopal, Congress General Secretary -Organisation. pic.twitter.com/q7PinKYWpG
— ANI (@ANI) May 18, 2023
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியேற்பு நாளை மறுநாள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Siddaramaiah