முகப்பு /செய்தி /இந்தியா / டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்காதது ஏன்...? சித்தராமையாவின் ஸ்மார்ட் மூவ்... பரபரப்பு தகவல்கள்..!

டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்காதது ஏன்...? சித்தராமையாவின் ஸ்மார்ட் மூவ்... பரபரப்பு தகவல்கள்..!

சிவக்குமார் - சித்தராமையா

சிவக்குமார் - சித்தராமையா

Karnataka CM | அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு சிவக்குமார் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

  • Last Updated :
  • Karnataka, India

டி.கே சிவக்குமார் கடந்த 2003-ஆம் ஆண்டில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக , பதவி வகித்தபோது அவர் மீது நில அபகரிப்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2012- ஆம் ஆண்டில் சிவக்குமார் மீது இரண்டு வழக்குகளை கர்நாடக லோக் ஆயுக்தா காவல் துறையினர் பதிவு செய்தனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2018-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது சிவக்குமார் மீது வருமானவரித் துறை நான்கு வழக்குகளை பதிவு செய்தது.

டி.கே. சிவக்குமார் வேண்டும் என்றே வரி ஏய்ப்பு செய்ததாகவும், சாட்சியங்களை அழித்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், 2018-ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில்தான், 2019-ஆம் ஆண்டு சிவக்குமார் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது டி.கே.சிவக்குமார் ஜாமீனில் இருந்து வருகிறார். மற்றொரு பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்து சிவக்குமார் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

மேலும் படிக்க... கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு.. துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்... காங்கிரஸ் அறிவிப்பு..!

அத்துடன் 2020-ஆம் ஆண்டு ஊழல் மற்றும் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிவக்குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த சூழ்நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கினால், அவர் மீது இருக்கும் வழக்குகளில் மீண்டும் கைதானால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் சித்தராமையா கூறியதாகத் தெரிகிறது.

இதன் காரணமாகவே, டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் தலைமை தயங்கியது. இந்த நிலையில்தான் சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்கவுள்ளனர்.

First published:

Tags: Congress, Karnataka, Karnataka Election 2023, Siddaramaiah