முகப்பு /செய்தி /இந்தியா / சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு...? டி.கே.சிவக்குமார் பேட்டி..!

சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு...? டி.கே.சிவக்குமார் பேட்டி..!

சித்தராமையா - சிவக்குமார்

சித்தராமையா - சிவக்குமார்

Karnataka CM | கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது. இதுதொடர்பாக, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்திய கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடமும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தன்னை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்பதில் டி.கே.சிவக்குமார் விடாப்பிடியாக இருந்ததால் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாரிடம் கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் எடுத்துரைத்தனர். அதன்படி, புதிய முதலமைச்சராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க... கர்நாடகாவுக்கு 2 முதலமைச்சர்...? சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்க காங்கிரஸ் முடிவு..!

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.கே.சிவக்குமார், “காங்கிரஸ் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு. யார் முதலமைச்சர், யார் துணை முதலமைச்சர் என்பதை கட்சி தலைமை முடிவெடுத்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

First published:

Tags: CM Siddramaiah, Congress, Karnataka, Rahul Gandhi