முகப்பு /செய்தி /இந்தியா / சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு- கர்நாடகா ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரிய சித்தராமையா

சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு- கர்நாடகா ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரிய சித்தராமையா

சித்தராமையா

சித்தராமையா

கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்தித்து பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்து ஆட்சியமைக்க சித்தராமையா உரிமை கோரினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக சித்தராமையா முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளை மறுநாள் கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, கர்நாடகாவில் அடுத்த புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரைதேர்வு செய்வதற்கான கூட்டம் பெங்களூருவில் கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநிலத்தின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்த போதும், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஆனது.

சித்தராமையாவும், டி.கே சிவகுமாரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். இருவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை தனித் தனியா சந்தித்து பேசினார். ஒரு கட்டத்தில் முதல்வர் போட்டியில் சித்தராமையா, டி.கே சிவகுமாருக்கு இடையே நெகிழ்வுத்தன்மையில்லாத, நம்பிக்கை இல்லாத, பிடிவாதத்துடன் கூடிய போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

இதையும் வாசிக்ககர்நாடகா காங்கிரஸின் இரு துருவங்கள்... சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன?

இந்நிலையில், கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக சித்தராமையா இன்று அறிவிக்கப்பட்டார். அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே சிவக்குமார் துணை முதலமைச்சராக செயல்படுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.

top videos

    இதையடுத்து, இன்று பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சித்திராமையா முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சித்தராமையா சந்தித்து பெரும்பான்மைக் கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார். டி.கே.சிவகுமார் உடனிருந்தார்.

    First published:

    Tags: Karnataka Election 2023, Siddaramaiah