இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. முகமது ஷமிக்கு ஹாசின் ஜஹான் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது ஷமி மீது ஹாசின் ஜஹான் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார்.
ஷமி வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரேயாக பிரிவுகளில் புகார் அளித்தார். ஆனால் ஹாசின் ஜஹானின் தொடர் புகார்களுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் முகமது ஷமி - ஹாசின் ஜஹான் விவாகரத்து கோரிய வழக்கு கொல்கத்தா குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 2018 ஆம் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஷமியின் மனைவி ஹாசின் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஷமி மீது பல்வேறு பரபரப்பு புகார்களை அடுக்கியுள்ளார். அவர் தனது மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக ஷமி மீதான கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என புகார் அளித்துள்ளார்.
அத்துடன், தனது கணவர் முகமது ஷமி தன்னிடம் வரதட்சனை கேட்டு மோசமாக கொடுமை செய்தார். பல பாலியல் தொழிலாளர்களிடம் கள்ள உறவு வைத்துக்கொண்டிருந்தார். இதற்காக தனியாக ஒரு மொபைல் போன் வைத்துக்கொண்டு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு உறவில் இருந்தார். கிரிக்கெட் விளையாட சக அணி வீரர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது கூட இந்த உறவுகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார் என ஹாசின் தனது மனுவில் புகார்களாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மோதலின்போது விராட் கோலியிடம் காம்பீர் சொன்னது என்ன? புதிய தகவலால் பரபரப்பு
ஏற்கனவே, முந்தைய வழக்கில் தன்னை பிரிந்திருக்கும் கணவர் ஷமி ஜீவனாம்சம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன்படி, கொல்கத்தா நீதிமன்றம் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் ஜஹானின் தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும், மீதமுள்ள ரூ.80,000 அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஜீவனாம்சம் தொகை தனக்கு திருப்திகரமாக இல்லை என ஹாசின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.