ஜாலியாக ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் போதே திடீரென சரிந்து உயிரிழக்கும் பகீர் சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இத்தகைய அதிர்ச்சிக்குரிய மாரடைப்பு மரணம் ஒன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் ராஜ்குமார். 52 வயதான இவர் பிலாய் பகுதியில் உள்ள உருக்காலையில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணுக்கு மே 4 தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காக திருமணம் நடைபெற்ற கிராமத்திற்கு திலீப் வந்துள்ளார். அன்று நாள் முழுவதும் உறவினர்களுடன் ஜாலியாக அடிப்பாடி மகிழ்ந்து பொழுதை கழித்தார் திலீப்.
பின்பு, புதுமண ஜோடியுடன் மேடையில் திலீப் ஜாலியாக குதித்து ஆடினார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்படுபவே, ஆடிக்கொண்டிருந்தவர் மேடையில் அப்படியே சில நொடிகள் அமர்ந்தார். தொடர்ந்து அப்படியே பின்நோக்கி சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் பதறிப்போய் அருகே உள்ள மருத்துவமனைக்கு திலீப்பை கொண்டு சேர்த்தனர்.
10 May 2023 : 🇮🇳 : Dilip Rautkar, an engineer at Bhilai Steel Plant, suffered a 💔attack💉 while dancing at a wedding & died on the spot.#heartattack2023 #TsunamiOfDeath #BeastShotStrikesAgain #BeastShot pic.twitter.com/PLogsrUAx7
— Anand Panna (@AnandPanna1) May 10, 2023
ஆனால், அவரது உயிர் வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது திலீப்பின் உறவினர்கள் மற்றும் நணபர்களிடேயே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேடையில் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்த நபரின் உயிர் கனநொடிகளில் பிரிந்த அதிர்ச்சி சம்பவம் திருமண நிகழ்வை சோக நிகழ்வாக மாற்றியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chhattisgarh, Marriage, Viral Video