முகப்பு /செய்தி /இந்தியா / முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி... மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ந்து போன புதுமாப்பிள்ளை...!

முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி... மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ந்து போன புதுமாப்பிள்ளை...!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்த விவகாரத்தில் தனக்கு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என புது மாப்பிள்ளை கோரிக்கை வைத்துள்ளார்.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

ஒருவர் தனது வாழ்வில் முக்கிய நிகழ்வாக பார்ப்பது திருமணம்தான். திருமணம் முடிந்த கையுடன் குடும்பத்தார் மிகுந்த உற்சாகத்துடன் புதுமணத் தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடு செய்து தருவது நம் நாட்டில் வழக்கமாக உள்ளது. அத்தகைய மகிழ்ச்சியான தருணம் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு புது மாப்பிள்ளைக்கு துயரமாக மாறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் முதலிரவு அன்று தம்பதி தனிமையில் இருந்த போது, மணமகன் மணப்பெண்ணின் வயிற்றுப் பகுதியில் 7-8 தையல் போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது ஏன் ஏற்பட்டது என காரணம் கேட்கவே, முதலில் மனைவி அதற்கு மழுப்பலான பதில் தெரிவித்துள்ளார். சந்தேகம் வலுக்கவே, தீவிரமாக கேட்டதில் அவருக்கு அதிர்ச்சி உண்மை அம்பலமானது.

மனைவி ஏற்கனவே ஒருவரை காதலித்துள்ளார். அந்த நபர் மூலம் பெண் கர்ப்பமடைந்த நிலையில், மூன்று மாதத்திற்குப் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைத்துள்ளார். இந்த உண்மைகளை பெண் வீட்டார் மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: நாள்தோறும் மாந்திரீக பூஜை.. தலையை துண்டித்து நரபலி கொடுத்த தம்பதி

இது தொடர்பான தகவல்களை மருத்துவமனைக்கு சென்று அந்த மணமகன் உறுதிப்படுத்திய நிலையில், ஆத்திரத்தில் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். இதற்குள்ளாக, அந்த பெண்ணின் வீட்டார் கணவர் மீது எதிர் வழக்கு தொடர்ந்து ஜீவனாம்சம் கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில் தனக்கு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என அந்த நபர் கோரிக்கை வைத்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Crime News, Husband Wife, Pregnant