முகப்பு /செய்தி /இந்தியா / உத்தவ் தாக்கரேவுக்காக திருப்பதிக்கு நடந்து சென்று உயிரிழந்த நபர்... வீடு கட்டிக் கொடுத்து உதவிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரேவுக்காக திருப்பதிக்கு நடந்து சென்று உயிரிழந்த நபர்... வீடு கட்டிக் கொடுத்து உதவிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

சுமந்த் ருய்கர் மனைவி மற்றும் குழந்தைகள்

சுமந்த் ருய்கர் மனைவி மற்றும் குழந்தைகள்

உத்தவ் தாக்கரே உடல்நலத்துக்காக வேண்டிய நடைப்பயணம் மேற்கொண்டு உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ஏக்நாத் ஷிண்டே உயிரிழந்துள்ளார்.

  • Last Updated :
  • Maharashtra, India

சிவசேனா மூத்த தலைவரும் முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே கடந்த 2021 நவம்பரில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது சிவசேனாவின் தீவிர ஆதரவாளரான சுமந்த் ருய்கர் (Sumant Ruikar) என்பவர் முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உடல்நிலை சரியாக பிரார்த்தனை செய்தார்.

மேலும் உத்தவ் தாக்கரே நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி கொண்டு திருப்பதி ஏழுமலையானை நடந்தே சென்று தரிசிப்பதாக வேண்டி கொண்டார். தனது பிரார்த்தனையை நிறைவேற்ற Beed பகுதியை சேர்ந்த சுமந்த் ருய்கர் கடந்த 2021-ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த கால்நடை பயணத்தின் போது துரதிர்ஷ்டவசமாக கர்நாடகாவிற்கு சென்ற சுமந்த் ருய்கர் உயிரிழந்தார்.

சுமந்த் தனது சக ஊழியரான ஸ்ரீதர் ஜாதவுடன் திருப்பதிக்கான இந்த கால்நடை பயணத்தை மேற்கொண்டார். திருப்பதிக்கு தங்களது பயணத்தை தொடங்கிய இருவரும் சுமார் 1,100 கிலோ மீட்டர் பயணத்தை முடிக்க தினமும் சராசரியாக சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் நடந்தனர். இந்த பிரார்த்தனை கால்நடை பயணத்தின் போது சுமந்தின் உடல்நிலை மோசமடைந்தது. எதிர்பாராவிதமாக கடந்த டிசம்பர் 25, 2021 அன்று கர்நாடகாவின் ராய்ச்சூரில் இறந்தார். சுமந்த் தனது குடும்ப வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்த நபர் ஆவார்.

Read More : காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்துள்ளது - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி

ருய்கரின் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் தற்போதைய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அவரது குடும்பத்தினரை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக உதவிகளை செய்வதாகவும், வீடு கட்டி தருவதாகவும் உறுதியளித்தார். அப்போது ஏக்நாத் ஷிண்டே அமைச்சராக இருந்தார். தற்போது மாநிலத்தின் முதலமைச்சராகி வீட்ட நிலையில், தான் அமைச்சராக இருந்த போது குடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி சுமந்த் ருய்கரின் குடும்பத்திற்கு அருமையான வீடு ஒன்றை கட்டி தந்துள்ளார், அதுவும் ரூ.25 லட்சம் செலவில்.

இறந்த சுமந்த் ருய்கருக்கு மனைவி, மகள், மகன் மற்றும் தந்தை உள்ளனர். இவர்கள் வசிக்கவே தற்போது ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீட்டை வழங்கி இருக்கிறார். இந்த வீடு ஷிண்டேவின் தனிப்பட்ட செலவில் கட்டப்பட்டதாகும்.

top videos

    சுமந்தின் மனைவி கீர்த்தி ருய்கர் இது குறித்து கூறுகையில், ’இந்த உதவிக்கு ஷிண்டே மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் பாஜிராவ் சவானுக்கு மிகவும் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார். மேலும் தங்களது வாழ்வாதாரத்திற்காக தற்போது unaided organization-ல் வேலை பார்த்து வரும் தனக்கு தகுதிக்கேற்ற வேலை ஏதேனும் வழங்குமாறு மகாராஷ்டிர அரசை கேட்டு கொள்வதாக கோரிக்கை விடுத்துள்ளார். உத்தவ் தாக்கரே நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்வதற்காக திருப்பதிக்கு நடந்தே புறப்பட்ட எனது கணவர் வழியிலேயே இறந்து விட்டார். ஆனால் என் கணவரின் மரணத்திற்கு உத்தவ் தாக்கரே ஒருமுறை கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் அல்லது ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று கீர்த்தி வருத்தம் தெரிவித்தார்.

    First published:

    Tags: Maharashtra, Trending, Viral