முகப்பு /செய்தி /இந்தியா / தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் திரும்பப் பெற்ற சரத் பவார்... தொண்டர்கள் மகிழ்ச்சி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் திரும்பப் பெற்ற சரத் பவார்... தொண்டர்கள் மகிழ்ச்சி

சரத் பவார்

சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றார்.

  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டுவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துவருகிறார் சரத்பவார். 1999-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். மகாராஷ்டிரா மாநில முதல்வர், மத்திய அமைச்சராக இருந்தவர். மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் தேசிய அளவில் மிக மூத்த அரசியல் தலைவராக அறியப்படுகிறார். குடியரசுத் தலைவர் வேட்பாளர், எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பெயர்களிலும் அவரது பெயர் அடிபட்டுவரும்.

இந்தந்திலையில், மும்பையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது அரசியல் நினைவுக் குறிப்புகளின் இரண்டாவது பதிப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மே 1, 1960ம் ஆண்டு முதல் மே 1, 2023ம் ஆண்டு வரை பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்,'' என்று கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் சரத் பவாரின் அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கருத்து நிலவி வரும் சூழலில் சரத் பவாரின் அறிவிப்பு எதிர்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சரத் பவார் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

தீவிரவாதத்தின் பாதிப்புகளைக் காட்டியுள்ளது - தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பிரதமர் ஆதரவு

இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றார்.

First published:

Tags: Sharad Pawar