முகப்பு /செய்தி /இந்தியா / தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் சரத் பவார்...!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் சரத் பவார்...!

சரத் பவார்

சரத் பவார்

Sharad Pawar | தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று சரத்பவார் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Maharashtra, India

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் பதவியில் இருந்தும், தேர்தல் அரசியலில் இருந்தும் விலகுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார்.

மும்பையில், இன்று தனது அரசியல் நினைவுக் குறிப்புகளின் இரண்டாவது பதிப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்துகொண்டார். அவர்  பேசுகையில்,  “மே  1, 1960ம் ஆண்டு முதல் மே 1, 2023ம் ஆண்டு வரை பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்,'' என்று கூறினார்.

82 வயதான சரத் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் மிக செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக இருந்து வருகிறார்.பொது வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பயணித்த அவர், 1999இல் அதிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை (NCP) நிறுவினார்.

மகாராஷ்டிரா முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். மேலும், இந்திய அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சரத்பவாரின் பதவிக் காலம் முடிவடைய இன்னும் மூன்றாண்டு காலம் உள்ளது.

தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தொடர்ச்சியான பயணம்’ என்பது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. பொது நிகழ்ச்சிகள், கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்வேன். புனே, மும்பை, பாராமதி, டெல்லி அல்லது இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இருந்தாலும், வழக்கம் போல் நான் உங்களுடன் தொடர்பில் இருப்பேன் என உறுதியளிக்கிறேன். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நான் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றுவேன்," என்று பவார் கூறினார்

இதையும் படிங்க; இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப் போகுது... வானிலை அலெர்ட்..!

கட்சியின்  அடுத்த தலைவர் பொறுப்பு  குறித்து முடிவு செய்ய  ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவில் சுப்ரியா சுலே, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சாகன் புஜ்பால், பிரபுல் படேல் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும் கூறினார். கட்சித் தலைவர் பொறுப்பைத் தாண்டி, கட்சியின் வளர்ச்சிக்கும், அதன் சித்தாந்தம், கொள்கைகளை கடை கோடி மக்களுக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

top videos

    சரத் பவாரின் இந்த திடீர் அறிவிப்பு தேசிய/ மாநில அரசியல் மட்டத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாதி அணி வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தொடருமா என்ற கேள்வி தற்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. முன்னதாக, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், பாஜக கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், சரத் பவாரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது

    First published:

    Tags: Maharashtra