முகப்பு /செய்தி /இந்தியா / பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து... பின்னணி என்ன?

பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து... பின்னணி என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 34 வயது பெண் ஓராண்டு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

  • Last Updated :
  • Maharashtra, India

பாலியல் தொழில் குற்றம் அல்ல, பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் விதமாக ஈடுபட்டால் தான் குற்றம் எனக் கூறி வழக்கு ஒன்றில் மும்பை செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள முல்லுண்டு பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக விபசாரத்தில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை காவல்துறை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மஜ்காவ் மாஜிஸ்ட்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த நீதிமன்றம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 34 வயது பெண் ஓராண்டு தேவ்னாரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் முதல் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதற்கு எதிராக அந்த பெண் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சிவி பாடீல், பெண்ணை காப்பகத்தில் இருந்து விடுவிக்கமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடைகளில் பில் போட செல்போன் நம்பர் கொடுக்க வேண்டாம்... வந்தது அதிரடி உத்தரவு...!

மேலும் அவர், அந்த பெண் பொது இடத்தில் பாலியல் தொழில் செய்தார் என எந்த குற்றச்சாட்டும் இல்லை. சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது  குற்றம் ஆகிவிடாது. அதை பொதுவெளியில் செய்வதோ, பிறருக்கு தொந்தரவாக அமைவதோ தான் குற்றம். மேலும், அந்த பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் சிறார்கள். அவர்களுக்கு தாய் நிச்சயம் தேவை. எனவே, பெண்ணை சுதந்திரமாக நடமாட விடாமல் பிடித்து வைப்பது அவரது உரிமையை பறிப்பதாகும் என தீர்ப்பில் கூறியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Court, Mumbai, Prostitution