முகப்பு /செய்தி /இந்தியா / சூடுபிடிக்கும் கர்நாடக தேர்தல்.. பிரதமர் மோடி , சோனியா காந்தி நாளை பிரச்சாரம்...

சூடுபிடிக்கும் கர்நாடக தேர்தல்.. பிரதமர் மோடி , சோனியா காந்தி நாளை பிரச்சாரம்...

பிரதமர் மோடி மற்றும்  சோனியா காந்தி

பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி

Karnataka Election 2023 | காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்து, ஹூப்பள்ளி-தார்வாட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்கிறார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

இதையும் படிங்க: 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்த மறுஆய்வு மனுக்கள்... தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் அமர்வில் விசாரணை..!

அண்மையில் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்து, ஹூப்பள்ளி-தார்வாட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்கிறார். இதற்காக, நாளை நண்பகலில் கர்நாடகாவிற்கு வரும் சோனியா காந்தி, பிற்பகல் 3 மணியளவில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நாளைய தினம், பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூரு நகரில் 36 கிலோமீட்டர் தூரம் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.

First published:

Tags: BJP, Congress, Karnataka Election 2023, PM Modi, Sonia Gandhi