விமானத்தில் சக பயணிகள் தொல்லையால் சிலர் பாதிக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்து பாதிக்கப்பட்ட அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற விமானத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று AI 630 ஏர் இந்தியா விமானம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை அங்கிருந்த தேள் ஒன்று கொட்டி கடித்துள்ளது.
பதறிப்போன பெண் புகார் தரவே, உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவக்குழு முதலுதவி செய்தது. குறைந்த நேரம் பயணம் என்பதால் விமான அதிகாரிகள் மும்பையில் தரையிறங்கும் வரை காத்திருந்து உடனடியாக பெண்ணை விமான நிலையித்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
பின்னர் அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பயணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் தரப்படதாக ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக கூறிய ஏர் இந்தியா நிர்வாகம் பயணிக்கு நேர்ந்த பாதிப்புக்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நண்பனின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்... கடனை திருப்பிக்கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!
மேலும், விமானத்தில் தேள் வந்தது எப்படி என்று உரிய ஆய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. பொதுவாக விமானத்தில் எலி, பறவைகள் போன்றவை தான் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், பறக்கும் விமானத்திற்கு பயணியை தேள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air India, Flight travel