முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி லட்டுக்களின் எடை குறைப்பு... கவுண்ட்டர்கள் மூலம் பக்தர்களிடம் விற்பனை செய்து மோசடி... 4 பேர் கைது

திருப்பதி லட்டுக்களின் எடை குறைப்பு... கவுண்ட்டர்கள் மூலம் பக்தர்களிடம் விற்பனை செய்து மோசடி... 4 பேர் கைது

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

மோசடி செய்த சிலரை பிடித்து விசாரிக்க தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்ட லட்டுக்களின் எடையை குறைத்து, மோசடி செய்த தேவஸ்தான ஊழியர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்காக, தேவஸ்தான நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் மூன்றரை லட்சம் லட்டுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லட்டுவின் எடை 175 கிராம் இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு லட்டுவின் எடையிலும் தலா 25 கிராம் வரை குறைத்து, அதன் மூலம் கூடுதல் லட்டு உற்பத்தி செய்து, சிலரின் ஒத்துழைப்புடன் கவுன்ட்டர்கள் மூலம் பக்தர்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நியூஸ்18 செய்தி எதிரொலி- இரு கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் சாதித்த மாணவனுக்கு உதவ முன்வந்த முதல்வர்

 இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, திருமலை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

top videos

    இதன் அடிப்படையில், தேவஸ்தான ஊழியர் ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் நீண்ட காலமாக இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து, இதில் தொடர்புடைய மேலும் சிலரை பிடித்து விசாரிக்க தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati laddu