முகப்பு /செய்தி /இந்தியா / “உணர்வுகளை புண்படுத்துகிறார்...” - ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த சாவர்க்கர் பேரன்..!

“உணர்வுகளை புண்படுத்துகிறார்...” - ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த சாவர்க்கர் பேரன்..!

ராகுல் காந்தி -  சாவர்க்கர் பேரன்

ராகுல் காந்தி - சாவர்க்கர் பேரன்

தனது தாத்தா குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக சாவர்க்கர் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Maharashtra, India

அவதூறு வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்ட ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பதியப்பட்டுள்ளது. சாவர்க்கரை தொடர்ச்சியாக ராகுல் காந்தி அவதூறு செய்வதாக சாவர்க்கரின் பேரன் புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

2019இல் கர்நாடாக மாநில பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மோடி என்ற துணை பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் எனப் பேசினார். இதற்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மேலும், இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டதன் காரணமாக ராகுல் காந்தியின் மக்களவை எம்பி பதவியும் பறிபோனது.

இந்நிலையில், ராகுல் காந்தி மீது அடுத்த அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது. மக்களவை பதவி பறிப்பு தொடர்பாக பேசிய ராகுல், பிரிட்டிஷாரிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார். நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று  கூறினார். சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தி விமர்சனத்திற்கு பாஜக, சிவசேனா போன்ற கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டன.

இந்நிலையில், தனது தாத்தா குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக சாவர்க்கர் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பாக சாவர்க்கர் பேரன் கூறுகையில், "இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி அங்கு ஒரு கூட்டத்தில் பேசும் போது, இஸ்லாமியர் ஒருவரை சாவர்க்கர் மற்றும் அவரது நண்பர்கள் 5-6 பேர் சேர்ந்து அடித்து சந்தோஷப்பட்டார் என்று இல்லாத கற்பனை விஷயங்களை பேசினார். அடிப்படை ஆதரமில்லாமல் இவ்வாறு பேசுவது எங்களை புண்படுத்துகிறது" என சாவர்க்கர் பேரன் புகார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் 10,000-ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு.. அடுத்த 10 நாள்களுக்கு உயரும் என எச்சரிக்கை

top videos

    ஏற்கனவே அவதூறு வழக்கால் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டு நெருக்கடிக்கு ஆளான நிலையில், அவர் மீது மீண்டும் ஒரு அவதூறு வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இரு நாள்களுக்கு முன்னர் வயநாடு தொகுதிக்கு சுற்று பயணம் செய்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

    First published:

    Tags: Defamation Case, Maharashtra, Rahul Gandhi