முகப்பு /செய்தி /இந்தியா / பாத்ரூமில் மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர்... ஐசியுவில் தீவிர சிகிச்சை... ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்...!

பாத்ரூமில் மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர்... ஐசியுவில் தீவிர சிகிச்சை... ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்...!

சத்தியேந்திரா ஜெயினுக்கு தீவிர சிகிச்சை

சத்தியேந்திரா ஜெயினுக்கு தீவிர சிகிச்சை

மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு டெல்லி முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

திகார் சிறையிலுள்ள குளியலறையில் தவறி விழுந்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்தியேந்திர ஜெயின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி  சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.  அதன்பிறகு இந்த வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்னர், சத்யேந்தர் ஜெயின் சிறையில் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் விருந்து சாப்பாடு சாப்பிடும் வீடியோவும் வைரலானது.

இந்நிலையில், திகார் சிறை குளியலறையில் நேற்று காலை 6 மணியளவில் சத்யேந்தர் ஜெயின் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். முதற்கட்டமாக அவருக்கு தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இதன்பின்னர், அவர் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சத்தியேந்திர ஜெயினின் உடல் நிலையை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துக் காரணங்களை சத்தியேந்திர ஜெயினுக்கு 6 வாரம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை, இந்த காலக்கட்டத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க கூடாது, டெல்லியை விட்டு வெளியேற கூடாது என்ற கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

இதையும் படிங்க: பார்கிங் பகுதியில் தூங்கிய குழந்தை... கார் மோதி பலியான சோக சம்பவம்...

top videos

    ஜெயின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தனது மத நம்பிக்கை காரணமாக ஜெயின் சிறையில் வெறும் பழங்கள், காய்கறிகள் மட்டும் தான் சாப்பிடுகிறார்.  சிறைவாசம் காரணமாக அவர் உடல் எடை 35 கிலோ குறைந்துள்ளது, அவர் உடல் நிலை பலவீனமாகி விட்டது என அக்கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Aam Aadmi Party, Delhi, Supreme court, Tihar