முகப்பு /செய்தி /இந்தியா / பாரம்பரிய வளையல் தயாரிப்பு தொழிலில் பின்னடைவு.! - மேற்குவங்க அரசு உதவியை எதிர்பார்க்கும் கலைஞர்கள்!

பாரம்பரிய வளையல் தயாரிப்பு தொழிலில் பின்னடைவு.! - மேற்குவங்க அரசு உதவியை எதிர்பார்க்கும் கலைஞர்கள்!

சங்கு ஓட்டில் செய்யப்படும் வெள்ளை வளையல்

சங்கு ஓட்டில் செய்யப்படும் வெள்ளை வளையல்

கணவர்களின் நல்வாழ்வுக்காக வங்காள பெண்கள் குங்குமம், சங்கா மற்றும் போலா உள்ளிட்ட அணிகலன்களை அணிவது காலங்காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. sankha என்பது சங்கு ஓடு-ஐ பயன்படுத்தி செய்யப்படும் வெள்ளை வளையல் ஆகும். அதே நேரம் pola என்பது சிவப்பு பவளத்தில் செய்யப்படும் வளையல் ஆகும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • West Bengal, India

இந்த நவீன காலத்திலும் இந்து திருமணங்களில் சங்கா (sankha), போலா (pola) உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் வெர்மிலியன் (vermilion) அதாவது குங்குமம் உள்ளிட்டவை முக்கியமானவை. குறிப்பாக சங்கா இந்து சமய இல்லத்தரசிகளின் ஆபரணங்களில் முக்கியமான ஒன்றாகும்.

முக்கியமாக மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில் மேற்காண்பவை முக்கியமானவை. மேலும் தங்கள் கணவர்களின் நல்வாழ்வுக்காக வங்காள பெண்கள் குங்குமம், சங்கா மற்றும் போலா உள்ளிட்ட அணிகலன்களை அணிவது காலங்காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. சங்கா என்பது சங்கு ஓடு-ஐ பயன்படுத்தி செய்யப்படும் வெள்ளை வளையல் ஆகும். அதே நேரம் போலா என்பது சிவப்பு பவளத்தில் செய்யப்படும் வளையல் ஆகும்.

திருமண பழக்கவழக்கங்களின்படி சங்கா மற்றும் போலா-வை ஒரு மணப்பெண் தன் 2 கைகளிலும் ஒரு ஜோடியை அணிய வேண்டும். திருமண சடங்குகளுக்கு மத்தியில் திருமண நாளின் அதிகாலையில் மணமகள் இதை அணிவர். நுட்பமான வடிவமைப்புகள் மற்றும் கைவினைத்திறன் உள்ளிட்டவற்றுடன் சங்கா இப்போது மிகவும் நவீனமாகிவிட்டது. கடந்த சில வருடங்களாக இவற்றின் தரம் குறைந்திருந்தாலும், விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சங்கா-வை தயார் செய்யும் ஆர்ட்டிஸ்ட்களுக்கு முன்பை போல ஆண்டு முழுவதும் வேலை இருப்பதில்லை.

இதனால் குடிசை தொழிலாக பல மக்களால் பிரபலமாக செய்யப்பட்டு சங்கா தயாரிப்பு தொழிலிலை விட்டு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் மேற்குவங்கத்தின் ஹவுரா மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏற்றத்தில் இருந்த சங்கா தயாரிப்பு, இப்போது மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. சங்கா தயாரிப்பில் மிகவும் திறமையான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.

ஆனால் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் இவர்களில் பலரும் இந்த தொழிலை விட்டு வெளியேறி வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். தற்போது இந்த தொழிலில் ஈடுபட புதிய தலைமுறையினர் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. சுமார் 400 - 500 ஆண்டுகள் பழமையான சங்கா தயாரிப்பில் இன்று ஒரு சில குடும்பங்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளன. பல கலைஞர்கள் தொழிலை விட்டு சென்றுவிட்ட நிலையில், கைவினைஞர்கள் கைகளுக்கு பதிலாக நவீன அமைப்புகளில் இயந்திரங்களின் உதவியுடன் சங்கா-வை உருவாக்கி வருகின்றனர். இதுபற்றி பேசி இருக்கும் சங்கா ஆர்ட்டிஸ்ட் Laltu Dutta, ஒரு காலத்தில் பந்துல் ஷகாரி பராவின் 50-60 குடும்பங்கள் சங்கா தயாரிப்பில் இருந்தன. ஆனால் தற்போது சுமார் 10 குடும்பத்தினர் மட்டுமே இந்த வேலையில் உள்ளனர். வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வேலை இருப்பதில்லை என்பதால் பலர் தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றார்.

மறுபுறம் மற்றொரு சங்கா ஆர்டிஸ்ட்டான கனிகா தத்தா பேசுகையில், சில ஆண்டுகளுக்கு முன் வரை அக்கம் பக்கத்தில் இருந்த பலர் சங்கா தயாரித்தனர். நான் இந்த வீட்டிற்கு வந்தபோது, ​​சங்கா எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை முதலில் பார்த்தேன். சில வருடங்கள் கழித்து நானும் சங்கா தயாரிக்க கற்றுக்கொண்டேன். இப்போது, இயந்திரத்தின் உதவியுடன், நானே வீட்டில் உட்கார்ந்து ஷெல்ஸ்களை உருவாக்குகிறேன். எனினும் கடந்த சில வருடங்களில் சங்கா ஆர்டிஸ்ட்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்றும் கூறினார். இந்த சூழலில் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க கைவினை கலைஞர்கல் மேற்குவங்க மாநில அரசின் ஆதரவை நாடுகின்றனர். ஒரு காலத்தில் சங்கா தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அரசு மானியத்துடன் நியாயமான விலையில் கிடைத்ததாக தெரிவித்த கலைஞர்கள், சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட மானியம் காரணமாக தங்களுக்கு சிக்கல் அதிகரித்ததாக கூறி இருக்கிறார்கள்.

First published: