மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
உலகின் பல நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் திருமணங்களை அங்கீகரிக்க போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்த்தாவில் இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணமும் செய்து கொண்டுள்ளனர். மௌமிதா மஜூம்தார் மற்றும் மௌசுமி தத்தா என்ற இருவரும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளனர். நாளாக நாளாக இருவருக்குமான நட்பு காதலாக மாறத் தொடங்கியுள்ளது.
இதில் மௌசுமி தத்தாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துகொண்டுள்ளனர். அதற்காக பங்கான் பகுதியில் இருந்த மௌமிதா, கொல்கத்தா வந்துள்ளார். அங்கு மௌசுமியை சந்தித்து பின் இருவரும் கொல்கத்தாவில் உள்ள பூட்நாத் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்து கொண்ட தகவலை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
காதல் என்னும் புனிதமான உணர்வு பரஸ்பரம் பாதுகாப்பை வழங்குகிறது என்று கூறியிருக்கிறார் மௌசுமி. ஏனென்றால் ஏற்கனவே திருமாணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள மௌசுமி தனது கணவனால் ஏராளமான கொடுமைகளை அனுபவித்து அவரிடம் இரந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அப்போது தான் மௌமிதாவின் நட்பு கிடைத்திருக்கிறது. அந்த நட்பு தந்த நம்பிக்கை காதலாகியிருக்கிறது. மௌசுமியை திருமணம் செய்து கொண்ட மௌமிதா, அவரின் இரண்டு குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
Also Read : அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
இவர்களின் காதலை இரண்டு குடும்பத்தினருமே ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். ”இந்த சமூகம் எங்களையும் எங்கள் திருமணத்தையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் அங்கீகரிக்கப்படும் வரை போராடுவோம். நாங்கள் இருவரும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” இருவரும் கூறியுள்ளனர். வடக்கு கொல்கத்தாவில் இருவரும் ஒரு அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kolkata, Same-sex Marriage