தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணங்களை சட்ட ரீதியான அங்கீகரிக்க கேட்கும் கோரிக்கை மேட்டிமைவாத மக்களது பார்வையாக மட்டுமே உள்ளது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தன்பாலீர்ப்பு திருமணங்களை அங்கீகரிக்கும் கோரும் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்த மத்திய அரசு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தின் புனிதத் தன்மைக்கு அச்சுறுத்தலாக இது அமையும் என்று தெரிவித்தது.
இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், ஒருபுறம் தன்பாலீர்ப்பு மக்களின் உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட கூடாது. அதே சமயம், ஆண் பாலுக்கும், பெண் பாலுக்கும் இடையிலான திருமணங்கள் மட்டுமே சட்டம் விதித்துள்ள நெறிமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, சட்டப் பிரச்னை அடங்கியுள்ள வழக்காக இது இருக்கிறது. எனவே, இதற்கு தீர்வு காண்பதற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படுவதாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி அறிவித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த அமர்வில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமர்வு நாளை முதல் (ஏப்ரல் 18) இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.
இந்நிலையில், மத்திய அரசு தனது இரண்டாவது பதில் மனுவை இன்று (ஏப்ரல் 17) தாக்கல் செய்தது. அதில், தன்பாலீர்ப்பு திருமணங்களை சட்டரீதியான கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்குமாறு கேட்கும் கோரிக்கை மேட்டிமைவாத மக்களது பார்வையாக மட்டுமே உள்ளது. எதிர்பாலின திருமண முறைகளே சட்டரீதியாகவும், மத ரீதியாகவும் ஏற்கப்பட நியமங்களைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய, திருமணங்களே சமூக நிறுவனங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க; ஆதார் போதும்... 5 நிமிடத்தில் 2 லட்சம் வரை கடன் கிடைக்கும்... எப்படி தெரியுமா?
தன்பாலீர்ப்பு திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் புதிய சமூக நிறுவனங்களை உருவாக்க நீதிமன்றம் முயற்சிக்கக் கூடாது. நீதிபதிகள் இந்த பணியை பாராளுமன்றத்திற்கு விட்டுவிட வேண்டும். தன்பாலீர்ப்பு திருமணங்கள் சமூக ரீதியாகவும் மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தன்பாலீர்ப்பு திருமணங்கள் மூலம் புதிய சமூக நிறுவனங்கள் கோருவதை அடிப்படை உரிமையாக கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, தனிமனித சுதந்திரம் என்பது முழு சமுதாயத்திற்குள்ள சுதரத்தினின்றும் பிற தனிமனிதர்களது சுதரத்தினின்றும் பிரித்து பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Supreme court