முகப்பு /செய்தி /இந்தியா / தன்பாலின ஈர்ப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆராய குழு... மத்திய அரசு தகவல்..!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆராய குழு... மத்திய அரசு தகவல்..!

LGBTQIA+ சமூகத்தினர்

LGBTQIA+ சமூகத்தினர்

Same Sex Marriage Case in Supreme Court | தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என வாதம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தன்பாலின ஈர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இதன்படி, 7வது நாளாக நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதத்தை முன்வைத்தார்.

அப்போது அவர், இந்த விவகாரத்தில் நிர்வாக ரீதியாக முடிவெடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதில், மத்திய அரசின் பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் வாசிக்க: விவகாரத்து வழக்கிற்கு இனி 6 மாத கால காத்திருப்பு கட்டாயமில்லை... உச்சநீதிமன்றம் அதிரடி

தன்பாலின ஈர்ப்பாளர்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், அவர்களுக்கு கூட்டாக வங்கிக்கணக்கு தொடங்க அனுமதிப்பது உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் பலன்களை கிடைக்கச் செய்வது குறித்து ஆராய மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதன்மூலம், சட்ட ரீதியான அனுமதி வழங்குவது குறித்து ஆராயலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

top videos

    இந்தக் குழுவுக்கு அனுப்புவதற்கான பரிந்துரைகள் மற்றும் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் குறித்து மனுதாரர்கள் தன்னிடம் வழங்கலாம் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார்.

    First published:

    Tags: Supreme court, Supreme Court Cheif Justice