ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இளம் தலைவராக இருப்பவர் சச்சின் பைலட்டிற்கும் முதல்வர் கெலாட்டிற்கும் நீண்ட காலமாகவே பூசல் இருந்து வருகிறது.
அடிக்கடி இருதரப்பும் மாறி மாறி போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் சில நாள்களின் அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. எனவே, இந்தாண்டு இறுதிக்குள் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், சச்சின் பைலட் ஆளும் மாநில அரசுக்கும், காங்கிரஸ் மேலிடத்திற்கும் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளார்.
மாநிலத்தில் ஆளும் அசோக் கெலாட் அரசு பாஜக பிரமுகர்களின் ஊழல் புகார்கள் மீது ஒழுங்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் கூறி சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார். தனது கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை ஏப்ரல் 11இல் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.
சொந்த கட்சியின் அரசுக்கு எதிராகவே ஒரு முன்னணி தலைவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவலியை உருவாக்கியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே உட்கட்சி பூசல் வலுத்து வருவது பாதகமான விளைவுகளை தரும் என கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்... காங்கிரஸ், பா.ஜ.க உயர்மட்டத் தலைவர்கள் தீவிர ஆலோசனை
முதலமைச்சர் அசோக் கெலாட் மீதான பினக்கு காரணமாக துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் சச்சின் பைலட். வரப்போகும் தேர்தலில் தன்னை முதலமைச்சர் முகமாக முன்னிறுத்தும் நோக்கில் சச்சின் பைலட் கட்சி மேலிடத்திற்கு மறைமுக அழுத்தம் தருவகாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashok Gehlot, Congress, Rajasthan, Sachin Pilot