முகப்பு /செய்தி /இந்தியா / அழிவின் பாதையில் மருத்துவ குணம் கொண்ட ரோஹிடா மரங்கள்.. காரணம் என்ன?

அழிவின் பாதையில் மருத்துவ குணம் கொண்ட ரோஹிடா மரங்கள்.. காரணம் என்ன?

ரோஹிடா மரம்

ரோஹிடா மரம்

ரோஹிடா மரத்தை யாராவது வெட்டி விற்பனை செய்தால் , அவர் மீது வனச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உரிமை உண்டு.

  • Last Updated :
  • Rajasthan, India

கடுமையான காலநிலையில் கூட தாக்குப்பிடித்து உயிர்வாழும் தன்மை கொண்ட ரோஹிடா என்ற மரம்  ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் உள்ளது. மருத்துவ குணங்களுக்காக அதிகம் அறியப்படும் இந்த மரம் தற்போது அழியும் தருவாய்க்கு தள்ளப்பட்டு வருகிறது. ரோஹிடா மர புறக்கணிப்பு மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அறைகூவல் எழுந்து வருகிறது.

ரோஹிடா (Tecomella undulata) ஒரு பூக்கும் தாவரமாகும். இது  ராஜஸ்தான் பகுதியில் நிலவும் கடுமையான வெப்பத்திலும், கடுமையான குளிர்காலத்திலும் கூட நிலைத்து நிற்கும் தன்மை பெற்றது.இதன் மதிப்பும் அதிகம். இந்த காரணங்களுக்காக  1983-ம் ஆண்டு ரோஹிட் பூவை 'மாநில மலராக' ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்தது.

காற்றில் மணல் வாரி பறக்கும் பாலைவன நிலப்பரப்பில் வளரும் இந்த செடியின் வேர்கள் ஆழமாக போய் மண்ணை பிடித்து நிற்கும் தன்மை கொண்டது.  இதனால் ராஜஸ்தான் சுரு பகுதியை மணல் காற்றில் இருந்து பாதுகாத்து  நிலைப்படுத்தி பாதுகாக்க இந்த மரம் பேருதவியாக இருந்து வருகிறது. இந்த மரம் பொதுவாக டிசம்பர் முதல் ஏப்ரல் வரை பிரகாசமான சிவப்பு - ஆரஞ்சு நிற பூக்களால் நிரம்பி அதை காணும் அனைவரையும் ஈர்க்கிறது.

அதேபோல, மருத்துவ பயன்பாட்டில் ரோஹிடாவும் முக்கியமானது. ரோஹிடா மரம் தோல், புண்கள், வயிற்று நோய்கள், காயங்கள், காது நோய்கள், கண், சிறுநீரக நோய்களுக்கான மருந்திலும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு வயிறு தொடர்பான நோய்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் இது Liv-52 மருந்திலும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தனை பண்புகள் கொண்ட ரோஹிடா செடியை வெட்டுவதும், அதன் மரத்தை விற்பதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. அதை மீறி, யாராவது வெட்டி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது வனச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உரிமை உண்டு. ஆனால் இன்று இந்த மரத்தின் நிழலில் பயிர்கள் விளைவதில்லை என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக மரங்களை அப்புறப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.

ரோஹிடா மரம் மிகவும் திடமானதாகவும் மதிப்புமிக்கதாகவும் கருதப்படுகிறது. ரோஹிடா தாவரத்தின் சராசரி வயது சுமார் 100 ஆண்டுகள். ரோஹிடா மரத்தால் செய்யப்பட்ட மரச்சாமான்கள் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கரையான் தாக்காது என்றும் கூறப்படுகிறது. ரோஹிடா மரதின் வலிமை இதை மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்குகிறது.

இந்த மரம் மரச்சாமான்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த காரணத்தால் இன்று இந்த மரங்கள் பெரிய அளவிலான அழிவை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு காரணத்தாலும், ரோஹிடா மரங்களின் எண்ணிக்கை என்பது பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது.

top videos

    இன்று ரோஹிடா மரங்கள் தங்கள் இருப்புக்கு போராடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதை பாதுகாக்க அரசு எந்த சிறப்பு திட்டமும் செய்யவில்லை. அதனால் இருக்கும் மரங்களும் பாதுகாப்பின்றி அழிந்து வருகின்றன என்று அந்த ஊரில் உள்ள விவசாயிகளும் சுற்றுசூழல் ஆர்வலர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Rajasthan