முகப்பு /செய்தி /இந்தியா / “மக்களின் காலை தொட்டு வணங்குகிறேன்...”- டி.கே.சிவக்குமார் உருக்கம்..!

“மக்களின் காலை தொட்டு வணங்குகிறேன்...”- டி.கே.சிவக்குமார் உருக்கம்..!

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

karnataka assembly election results 2023 | கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றிபெற்றார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 132 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 64 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் டெபாசிட் இழந்தார்.

காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க; கர்நாடகாவை ‘கை’ப்பற்றுகிறது காங்கிரஸ்...!

top videos

    இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருப்பவருமான டி.கே.சிவக்குமார், “வெற்றியை கொடுத்த மக்களின் காலைத் தொட்டு வணங்குகிறேன்” எனக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    First published:

    Tags: Karnataka Election 2023