முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவை ‘கை’ப்பற்றுகிறது காங்கிரஸ்...!

கர்நாடகாவை ‘கை’ப்பற்றுகிறது காங்கிரஸ்...!

காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்

காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்

karnataka assembly election results 2023 | காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் வேறு கட்சிகளில் ஆதரவின்றி பெரும்பான்மை பெறும் நிலை உருவாகியுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 130 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 67 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் டெபாசிட் இழந்தார்.

காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் வேறு கட்சிகளில் ஆதரவின்றி பெரும்பான்மை பெறும் நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க; கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023 நேரலை

காங்கிரஸில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் இருநபர் குழு கர்நாடகா வருகிறது. முதல்வர் யார் என்பது உள்ளிட்ட குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

First published:

Tags: Karnataka Election 2023