முகப்பு /செய்தி /இந்தியா / ‘கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெறும்…’ - முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமித் ஷா பதில்

‘கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெறும்…’ - முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமித் ஷா பதில்

நியூஸ் 18 மாநாட்டில் அமித் ஷா

நியூஸ் 18 மாநாட்டில் அமித் ஷா

கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நடத்தி வரும் தி ரைசிங் இந்தியா மாநாட்டில் பங்கேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது- கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக பாதிக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

இந்த முறை வரலாறு காணாத வெற்றியை பாஜக பெரும். கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பிரச்சாரகராக எட்டியூரப்பா இருப்பார். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. மக்களிடம் பாஜகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. எனவே இந்த முறையும் வெற்றி நிச்சயம்.  மக்களால் தேர்வு செய்யப்படும் எம்எல்ஏக்கள் இணைந்து கர்நாடக முதல்வரை தேர்வு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10 -ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த முறை காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். கர்நாடக பாஜக அரசு ஊழல் பெருமளவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், பெரும்பான்மையை பெற தவறியது. இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உதவியோடு கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. எச்.டி. குமாரசாமி முதல்வராக பொறுப்பில் இருந்தார். பின்னாளில் 17 காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியினர் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

First published:

Tags: NEWS18 RISING INDIA