முகப்பு /செய்தி /இந்தியா / மெக்சிகன் ராட்சத ஆமை மேற்கு வங்கத்தில் கண்டுபிடிப்பு.. விலங்கு நிபுணர்கள் வியப்பு..!

மெக்சிகன் ராட்சத ஆமை மேற்கு வங்கத்தில் கண்டுபிடிப்பு.. விலங்கு நிபுணர்கள் வியப்பு..!

ஆமை

ஆமை

Mexican Giant Turtle | மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் ரெட் ஈயர்டு ஸ்லைடர் (Red Eared Slider) என்று அழைக்கப்படும் மெக்சிகன் ராட்சத ஆமை (Mexican Giant Turtle) கண்டறியப்பட்டுள்ளது விலங்கு நிபுணர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • West Bengal, India

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் ரெட் ஈயர்டு ஸ்லைடர் (Red Eared Slider) என்று அழைக்கப்படும் மெக்சிகன் ராட்சத ஆமை (Mexican Giant Turtle) கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்கு நிபுணர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இந்த வகை ஆமை மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் Mississippi நதியை பூர்வீகமாக கொண்டது. இப்படி இருக்கையில் நம் நாட்டின் மேற்கு வங்கத்தில் இந்த வகை ஆமை கண்டறியப்பட்டு உள்ளது நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் உலகில் காணப்படும் 7 வகை ஆமைகளில் மெக்சிகன் ராட்சத ஆமையே மிகவும் அபூர்வமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விலங்கு வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த வகை ஆமையின் அறிவியல் பெயர் ‘டிராகெமிஸ் ஸ்கிரிப்ட் எலிகன்ஸ்’ (Trachemys scripta elegans) ஆகும். இதன் காதுகளுக்கு அருகில் பிரகாசமான சிவப்பு வட்டம் அல்லது நீள்வட்ட புள்ளிகள் இருக்கும் என்பதால் Red Eared Slider என்ற பெயர் பெற்றது.

மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட இந்த ராட்சத ஆமை, மேற்கு வங்கத்தின் ஹவுராவில் உள்ள ஷியாம்பூர் பகுதியில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் உடலில் வண்ணமயமான கோடுகள் உள்ளன. மேலும் இவை தண்ணீரில் நடமாடும் போது தங்க நிறத்தில் ஜொலிக்கும் என்பதால் இந்த ஆமை வெளிநாடுகளில் செல்ல பிராணியாக பிரபலமாக உள்ள ஒன்றாகும்.

இப்படிப்பட்ட இந்த வகை ஆமை பொதுவாக நம் நாட்டில் காணப்படுவதில்லை. இருப்பினும் சமீபத்தில் ஹவுராவில் இந்த வகை ஆமை கண்டுபிடிக்கப்பட்டது தான் நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹவுரா மாவட்டத்தில் உள்ள Shyampur reservoir-ன் தெற்கு மலஞ்சா பெரியாவில் 58 கேட் ரேஞ்சில் உள்ள வன ஊழியர்களால் இந்த ஆமை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட மெக்சிகன் ஆமைக்கு சுமார் 1 வயது இருக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Also see... ஆடு வளர்ப்பில் அசத்தல் முயற்சி - மாத்தி யோசித்த தெலுங்கானா விவசாயி

இந்த வகை ஆமை இனமானது மிடில் ஜுராசிக் பீரியட்டில் தோன்றி இருக்கலாம் என கூறுகிறார்கள் நிபுணர்கள். டெஸ்டுடியன்களிடமிருந்து உருவாகி படிப்படியாக இன்றைய சிவப்பு காது ஸ்லைடர்களாக மாறியிருக்கலாம் என்று விலங்கியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வகை ஆமை டெஸ்டுடியன்களிடமிருந்து உருவாகி படிப்படியாக தற்போதைய Red-Eared slider-ஆக மாறி இருக்கலாம் என கருதப்படுகிறது. பொதுவாக, இந்த வகை ஆமைகள் குளங்கள், சிறிய நீர்நிலைகள் மற்றும் நன்னீர் ஆகியவற்றில் காணப்படுகின்றன. மேலும் இவை எந்த சூழலுக்கும் விரைவாக ஒத்துப்போகின்றன.

இவற்றின் உடல் வளர்ச்சியும் மிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வகை ஆமை வாழும் பகுதியில் மீன்களோ அல்லது மற்ற நீர்வாழ் உயிரினங்களோ வாழ முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி இருந்தும் இந்த வகை ஆமை எப்படி ஷியாம்பூர் நீர்த்தேக்கத்திற்கு வந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

top videos

    Red Eared Slider வகையின் சப்-ஸ்பீசிஸ்களில் ஒன்று Snapping ஆமை. இது 100 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த வகை ஆமை கண்டறியப்படுவது இது முதல் முறையல்ல, மூன்றாவது முறையாகும். கடந்த 2015-ல் ராஜர்ஹத் நீர்த்தேக்கத்தில் காணப்பட்டது. பின் 2020-ஆம் ஆண்டு ரவீந்திர சரோவரில் காணப்பட்டது. இந்தியாவை பொறுத்த வரை முதன்முதலில் கேரளாவின் கோல்தோட் கால்வாயில் தான் இந்த ஆமை காணப்பட்டது. கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் அதை மீட்டு கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Howrah S25p25, West Indies India