முகப்பு /செய்தி /இந்தியா / ரூ.2,000 நோட்டுகளை ஒப்படைக்க காலக்கெடு... முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ஆர்பிஐ!

ரூ.2,000 நோட்டுகளை ஒப்படைக்க காலக்கெடு... முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ஆர்பிஐ!

ரூ. 2000 நோட்டுகள்

ரூ. 2000 நோட்டுகள்

நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2016ம் ஆண்டு  பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, 8 நவம்பர் 2016 அன்று நள்ளிரவு முதல் நாட்டின் பணப்புழக்கத்தில் இருந்த ரூ 1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

அதேசமயம், ரிசர்வ் வங்கி புதிய ரூ 500 மற்றும் 2000 நோட்டுகளை வெளியிட்டது. பணப் புழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. இதையடுத்து, 2018-19 நிதியாண்டில் இருந்து ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவதை ஆர்பிஐ முற்றிலுமாக நிறுத்தியது.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு பிரச்சனைகள் குறைந்துள்ளதாலும், நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதாலும் ரூ. 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது.

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகிறது ஆர்பிஐ: வெளியானது அதிரடி அறிவிப்பு

top videos

    அதேபோல, 2,000 நோட்டுகளை வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, வாடிக்கையாளர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: RBI