முகப்பு /செய்தி /இந்தியா / ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது... ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது... ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50 சதவீத ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மூன்று நாள் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாணய கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்தார். அப்போழுது வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50 சதவீத ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும் நாட்டில் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நடப்பு நிதியாண்டில் பண வீக்கம் 4 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளதாகவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் முன்னேறிய நாடுகளை விட இந்தியா சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆப்பிரிக்கா, மத்திய ஆசியாவிற்கு விமானங்களை இயக்கவுள்ள இன்டிகோ நிறுவனம்… இதோ முழு விபரம்!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என தெரிவித்துள்ளார். நிலையான வைப்பு தொகைக்கான விகிதம் 6 புள்ளி இரண்டு ஐந்தாகவும், விளிம்பு நிலை விகிதம் 6 புள்ளி ஏழு ஐந்தாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால், வங்கிகளுக்கிடையே பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Reserve Bank of India