முகப்பு /செய்தி /இந்தியா / ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான கடவுள்.. அல்லாவால் அனுப்பி வைக்கப்பட்டவர் - பரூக் அப்துல்லா பேச்சு

ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான கடவுள்.. அல்லாவால் அனுப்பி வைக்கப்பட்டவர் - பரூக் அப்துல்லா பேச்சு

பரூக் அப்துல்லா

பரூக் அப்துல்லா

ராமர் இந்துக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல, அனைத்து மக்களுக்குமான கடவுள் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா உத்தம்பூர் பகுதியில் பேந்தர்ஸ் கட்சி என்ற உள்ளூர் கட்சி நடத்திய விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் ராமர் குறித்து கூறிய கவனம் பெற்றுள்ளது.

பரூக் அப்துல்லா தனது உரையில் கூறியதாவது, "ராமர் இந்துக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல. இந்த எண்ணத்தை நீங்கள் மனதில் இருந்து மாற்றிக்கொள்ளுங்கள். கிறிஸ்துவர், இஸ்லாமியர், அமெரிக்கர், ரஷ்யர் என யாராக இருந்தாலும் நம்பிக்கை கொண்ட அவர்களுக்கு ராமர் கடவுள் தான். மக்களுக்கு நல்வழியை காட்ட அல்லாவால் அனுப்பப்பட்டவர் தான் ராமர்.

நாங்கள் மட்டும் தான் ராமரை பின்பற்றும் நபர்கள் யாராவது சொல்லிக்கொண்டு பேசினால் அவர்கள் முட்டாள்கள். அவர்கள் ராமர் மீது அன்பு கொள்ளவில்லை. அவர்கள் ராமரை விற்க பார்க்கிறார்கள். தங்கள் ராமரை விட அதிகாரத்தின் மீது தான் விருப்பம் உள்ளது.

இதையும் படிங்க: கையில் குடையுடன் சாமானியர் போல தெருக்களில் நடந்து சென்ற அம்ரித் பால் சிங்.. வெளியான சிசிடிவி காட்சிகள்

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் அறிவித்தால் ராமர் கோயிலை திறக்கிறேன் எனக் கூறி அவர்கள் மக்களை திசை திருப்ப பார்ப்பார்கள். மேலும், தேர்தல் காலத்தில் இந்துக்களுக்கு ஆபத்து எனக் கூறி மக்களை தங்கள் வலையில் வீழ்த்த பார்ப்பார்கள் நீங்கள் அதற்கு இரையாக வேண்டாம்." இவ்வாறு பரூக் அப்துல்லா பேசியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Farooq Abdullah, Jammu and Kashmir