முகப்பு /செய்தி /இந்தியா / மனைவியின் குடும்பத்தினரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட இளைஞர் - மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி

மனைவியின் குடும்பத்தினரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட இளைஞர் - மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காதல் திருமணம் செய்த இளைஞர் மனைவியின் குடும்பத்தினரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

ராஜஸ்தானில் மனைவியின் குடும்பத்தினரால் கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சைனி. இவருக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த அம்ரீன் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் 2021-ல் காதல் திருமணம் செய்துக்கொண்டதாக தெரிகிறது. இருவரும் ஜெய்பூரில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறி அம்ரீன் மத்தியபிரதேசம் வந்துள்ளார். அதன்பின்னர் அவர் ஜெய்ப்பூர் திரும்பவில்லை.

இதனையடுத்து மனைவியை அழைத்து செல்வதற்காக ராஜேந்திரா மத்திய பிரதேசம் சென்றுள்ளார். மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அம்ரீன் தாய் மற்றும் சகோதரன் ராஜேந்திராவை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உடலில் வெளிக்காயங்கள் இல்லாத நிலையில் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அம்ரீன் தாய், தந்தை மற்றும் அவரது சகோதரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Crime News, Murder, Tamil News