முகப்பு /செய்தி /இந்தியா / “ரயில் போல நெனச்சுட்டேன்...” - பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த நபர் கைது...!

“ரயில் போல நெனச்சுட்டேன்...” - பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த நபர் கைது...!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விமானத்தின் கழிவறையில் அமர்ந்து பீடி புகைத்த நபரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

விமான பயணத்தின் போது விதிமுறை மீறல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகம் நிகழ்கின்றன. குறிப்பாக, மதுபோதையில் சக பயணிகளிடம் ரகளை செய்தல், ஏர் ஹோஸ்டஸ் போன்ற விமான பணி பெண்களிடம் சில்மிஷம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பதற்றத்தை உருவாக்கும் பயணிகளை விமான நிலைய காவல்துறை கைது செய்து தண்டனை வழங்குகிறது. அத்தகைய அத்துமீறில் சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள மார்வர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு வரை ஏர் ஆகாசா விமானத்தில் கடந்த செவ்வாய்கிழமை பயணம் செய்துள்ளார். சொந்த வேலைக்காக பிரவீன் பெங்களூரு சென்ற நிலையியல் இவருடன் மற்றொரு வயதான உறவினரும் உடன் வந்துள்ளார்.

இதுவரை விமானத்தில் பயணிக்காத பிரவீனுக்கு தனது முதல் பயணமே மறக்க முடியததாக மாறிவிட்டது. காரணம், விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் உள்ள கழிவறைக்குள் சென்ற பிரவீன், தன்னிடம் இருந்த பீடியை எடுத்து பற்ற வைத்து புகைக்க தொடங்கியுள்ளார். தீவிபத்து அச்சம் காரணமாக விமானத்திற்குள் புகைப்பிடித்தல் போன்ற செயலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், முதல் முறை பயணம் செய்யும் பிரவீனுக்கு இது தெரியவில்லை.

அதற்குள்ளாக பிரவீன் புகைப்பிடித்தது டியூட்டி மேனேஜர் விஜய் துலுரு குமார் கவனத்திற்கு வந்தது. அவரது புகாரின் பேரில் பெங்களூரு காவல்துறை பிரவீனை கைது செய்தது. பயணியிடம் நடத்திய விசாரணையில், நான் ரயிலில் அடிக்கடி பயணம் செய்வேன். அப்போதெல்லாம் கழிவறையில் பீடி குடிப்பேன். அப்படித்தான் விமானத்திலும் செய்தேன் என்று விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை - அதிரடியான சட்டத்தை கொண்டுவந்த அரசு

top videos

    விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக கடுமையான சோதனைகள் நடைபெறும் என்ற நிலையில் பிரவீன் பீடியை எப்படி கொண்டுவந்தார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அகமதாபாத் விமான நிலையத்தில் உரிய பாதுகாப்புகள் சோதனை நடத்தப்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பிரவீன் ஒரு வார நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Airport, Bengaluru, Crime News, Flight travel, Karnataka