முகப்பு /செய்தி /இந்தியா / மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து.. ரூ.2,000 கோடிக் கூடுதல் வருவாய் ஈட்டிய ரயில்வே

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து.. ரூ.2,000 கோடிக் கூடுதல் வருவாய் ஈட்டிய ரயில்வே

ரயில்வே

ரயில்வே

ரயில்வேயில் வருவாய் அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்வே துறைக்கு 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது.

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு என்று கட்டண சலுகைகள் இந்தியன் ரயில்வே மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 விழுக்காடும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடும் ரயில்களில் கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி இந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது ரயில் சேவை சீரடைந்துள்ள போதும் நிறுத்தப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. அதை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read : பெண்களுக்கு மாதம் ரூ.2000.. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பு

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியில் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை நிறுத்தப்பட்டதால் மட்டும், 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே பதில் அளித்துள்ளது.

First published:

Tags: Indian Railways, Train ticket