முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல் காந்தி தகுதி நீக்கம் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கியுள்ளது - காங்கிரஸ் எம்பி சசி தரூர்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கியுள்ளது - காங்கிரஸ் எம்பி சசி தரூர்

சசி தரூர்

சசி தரூர்

ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்க விவகாரம் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆச்சரியம் அளிக்கும் விதமான ஒற்றுமையை உருவாக்கியுள்ளது என சசி தரூர் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "தேசிய அளவில் பெரும் தடம் பதித்துள்ள ஒரு எதிர்க்கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். சுமார் 200 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி உள்ளது.

மற்ற எதிர்க்கட்சிகளோ ஒரு மாநிலத்தில் தான் வலுவாக உள்ள. ஒரு சில கட்சிகள் 2 மாநிலங்களில் வலுவாக உள்ளன. எனவே, எதிர்க்கட்சி ஒன்றிணைப்பில் இயல்பாகவே காங்கிரஸ் தான் பிரதான முகமாக இருக்க முடியும். இந்த சூழலில் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்க விவகாரம் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆச்சரியம் அளிக்கும் விதமான ஒற்றுமையை உருவாக்கியுள்ளது.

ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பிஆர்எஸ் கட்சி, சிபிஎம் போன்ற பல கட்சிகளும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் பக்கம் நிற்கின்றன. பொது நோக்கத்திற்காகவும், வாக்குகள் பிரிவதை தடுப்பதற்காகவும் எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்கொள்ள ஒன்றிணைந்துள்ளன. இந்த ஒற்றுமை 2024 தேர்தலில் பாஜகவின் வெற்றியை கடினமாக்கியுள்ளது.

இதையும் படிங்க: மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்.. அமித் ஷா பேச்சு

நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தால், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள சிறு கட்சிகளை கூட்டணியில் ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருப்பேன். ஒற்றுமை தான் முக்கியம்" என்பதே எனது பார்வை என சசி தரூர் கூறியுள்ளார்.

First published:

Tags: Congress, Rahul Gandhi, Shashi Tharoor