முகப்பு /செய்தி /இந்தியா / “மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது... அரசு பங்களாவை காலி செய்கிறேன்...” - ராகுல்காந்தி

“மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது... அரசு பங்களாவை காலி செய்கிறேன்...” - ராகுல்காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை துணை செயலருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

  • Last Updated :
  • New Delhi, India

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால் அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு மக்களவை செயலகம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை துணை செயலாளருக்கு ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தான் 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று பொதுமக்களுக்குச் சேவையாற்றி உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அரசு பங்களாவில் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது என்று எழுதியுள்ள ராகுல் காந்தி, விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Also Read : உக்ரைனில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு... மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்..!

top videos

    ராகுல் காந்தி எம்.பி. ஆக இருந்த வயநாடு தொகுதி தற்போது காலியாகவுள்ள நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Congress, Letter, Rahul Gandhi