கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற ராகுல் காந்தி உதவி செய்வார் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10 -ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த முறை காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். கர்நாடக பாஜக அரசு ஊழல் பெருமளவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.
இந்த நிலையில் நியூஸ் 18 நெட்வொர்க் நடத்திய தி ரைசிங் இந்தியா மாநாட்டில் பங்கேற்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது- ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் எந்த விதி மீறலும் நடக்கவில்லை. சட்டப்படிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியால் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கு ராகுல் காந்திதான் அதிக உதவிகளை செய்யப் போகிறார்.
கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், பெரும்பான்மையை பெற தவறியது. இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உதவியோடு கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. எச்.டி. குமாரசாமி முதல்வராக பொறுப்பில் இருந்தார். பின்னாளில் 17 காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியினர் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NEWS18 RISING INDIA