முகப்பு /செய்தி /இந்தியா / ”உண்மையைப் பேசியதற்கான விலை... அம்மாவுடன் தங்கப் போகிறேன்... அரசு இல்லத்தை காலிசெய்த ராகுல் காந்தி நெகிழ்ச்சி

”உண்மையைப் பேசியதற்கான விலை... அம்மாவுடன் தங்கப் போகிறேன்... அரசு இல்லத்தை காலிசெய்த ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அரசு இல்லத்தைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முறைப்படி காலிசெய்துள்ளார்.

  • Last Updated :
  • New Delhi, India

எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அரசு இல்லத்தை காலிசெய்த ராகுல் காந்தி, ”உண்மையைப் பேசுவதற்காக விலை இது” என்று கூறியுள்ளார்.

வயநாடு தொகுதி எம்.பியாக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2005-ம் ஆண்டு முதலே, அதாவது சுமார் 19 ஆண்டுகள் டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசு இல்லத்தை காலிசெய்யுமாறு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஏற்கனவே வீட்டிலிருந்த சில பொருட்களை ஜன்பத் சாலையில் உள்ள தனது தாய் சோனியாகாந்தி இல்லத்துக்குக் கொண்டுசென்றார். இந்த நிலையில், முறைப்படி வீட்டை ராகுல் காந்தி இன்று காலிசெய்தார். வீட்டின் சாவி மக்களவைச் செயலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Also Read : ”பிரதமர் மோடி மீதான இந்த பாசமே பாஜகவின் பலம்” - வீடியோ வெளியிட்டு அமித்ஷா பெருமிதம்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 19 ஆண்டுகள் அரசு இல்லத்தில் தங்கினேன். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று கூறினார். மேலும், உண்மையைப் பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்க தயார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, ஜன்பத் சாலையில் உள்ள சோனியாகாந்தி இல்லத்திலேயே ராகுல் காந்தி வசிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Congress, Delhi, Rahul Gandhi