முகப்பு /செய்தி /இந்தியா / "நாட்டைப் பற்றி தரக்குறைவாக நான் பேசவில்லை- ராகுல்காந்தி விளக்கம்!

"நாட்டைப் பற்றி தரக்குறைவாக நான் பேசவில்லை- ராகுல்காந்தி விளக்கம்!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Rahul Gandhi Press Meet | நாட்டின் பிரதான பிரச்சனைகளை மக்களிடம் இருந்து திசை திருப்ப மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாட்டில் ஜனநாயகம் இருந்தால் தன்னை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிருப்பார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்

இங்கிலாந்தில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவை சிறுமைப்படுத்தியதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பாஜகவினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு நாடு திரும்பிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,லண்டனில் நாட்டைப் பற்றி தரக்குறைவாக தான் பேசவில்லை என்று கூறினார். இந்திய ஜனநாயகம் செயல்பட்டிருந்தால், தன்னை நாடாளுமன்றத்தில் பேச அனுமதி வழங்கி இருப்பார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு அதானி விவகாரத்தை எதிர்கொள்வதில் அச்சம் இருப்பதாக கூறிய ராகுல், பிரதமர் மோடிக்கும் - தொழிலதிபர் அதானிக்கும் என்ன உறவு எனவும் கேள்வி எழுப்பினார். தனது பேச்சை திசைதிருப்பி அதானி விவகாரத்தை மூடி மறைக்க மத்திய அரசு முயல்வதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 5 மடங்கு அதிகரித்த கொரோனா பரவல் : தமிழக அரசை அலெர்ட் செய்த மத்திய சுகாதாரத்துறை!

நாடாளுமன்றத்தில், தன் மீது குற்றம்சாட்டிய 4 அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு, அவர்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க தனக்கும் கொடுக்கப்படுமா என்றும் ராகுல் காந்தி வினவினார். நாட்டின் பிரதான பிரச்சனைகளை மக்களிடம் இருந்து திசை திருப்ப மத்திய அரசு முயற்சி செய்துவருவதாகவும், அதானி குறித்து தான் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்

First published:

Tags: Congress, Rahul Gandhi