மத்திய அரசின் குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க, தனக்கு அனுமதி வழங்குமாறு சபாநாயகருக்கு ராகுல் காந்தி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தியாவின் ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி லண்டனில் பேசியதற்கு மன்னிப்பு கேட்கக் கோரி பாஜகவினர் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கடந்த வாரம் சபாநாயகரை சந்தித்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், அதே கோரிக்கையை முன்வைத்து ஓம் பிர்லாவிற்கு ராகுல் காந்தி மீண்டும் விளக்கமாக கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், பாஜக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தனக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக ராகுல் கூறியுள்ளார். எனவே, குற்றச்சாட்டுகளுக்கு தனிப்பட்ட விளக்கங்களை அளிக்க அனுமதி வழங்கி, மக்களவை நடத்தை விதி 357-யின் கீழ், தனக்கு பதில் அளிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு பதில் அளிப்பது மட்டுமின்றி, பொது வெளியில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த சட்டப்பிரிவின் படி அனுமதி வழங்கப்பட்ட நிகழ்வுகளை ராகுல் மேற்கோள் காட்டியுள்ளார். எனவே, மக்களவையில் தனக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று சபாநாயகரிடம் ராகுல் காந்தி கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Congress President Rahul Gandhi, Rahul Gandhi, Rajya Sabha