முகப்பு /செய்தி /இந்தியா / கைகொடுக்க வந்த கார்த்தி சிதம்பரம்.. கண்டுகொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி... வைரல் வீடியோ..!

கைகொடுக்க வந்த கார்த்தி சிதம்பரம்.. கண்டுகொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி... வைரல் வீடியோ..!

கார்த்திக் சிதம்பரத்தை கண்டு கொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி

கார்த்திக் சிதம்பரத்தை கண்டு கொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி

Rahul Gandhi Ignore Karthik Chidambaram | காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் வந்தார் ராகுல் காந்தி.

  • Last Updated :
  • Delhi, India

2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தகுதிநீக்கத்திற்காக தான் அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்த ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கண்ணில் பயம் தெரிவதாகவும் ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் wordly கேமை விளையாடி அதை பற்றி ட்விட்டரில் போஸ்ட் செய்ததும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

#JUSTIN கார்த்திக்கு ‘கை' கொடுக்க மறுத்த ராகுல்#RahulGandhi #KartiChidambaram #Parliament #News18TamilNadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/IiRtJTCjM8

— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 29, 2023

இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி வந்திருந்தார். அப்போது நுழைவாயிலில்  ராகுல்காந்தியை ஒரு சிலர் கை கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்த காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் காந்தி வணக்கம் கூறினார். இதேபோல  சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கை கொடுக்க முயன்ற நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றார் ராகுல்காந்தி. இதனால் ஏமாற்றத்துடன் கார்த்தி சிதம்பரம் அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: Rahul Gandhi