முகப்பு /செய்தி /இந்தியா / தகுதிநீக்கம் ஏன்.? ராகுல்காந்தியின் அடுத்த மூவ் என்ன? முன் உள்ள சவால்கள் இதுதான்!

தகுதிநீக்கம் ஏன்.? ராகுல்காந்தியின் அடுத்த மூவ் என்ன? முன் உள்ள சவால்கள் இதுதான்!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

2 ஆண்டு சிறை தண்டனை எதிரொலியாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கங்கள் மற்றும் அவர் முன் வாய்ப்புகள் உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், 3 சூழல்களில் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். பிரிவுகள் 101 ஒன்று, 191 ஒன்று ஆகியவற்றின் கீழ் இரட்டை பதவி வகித்தாலோ, மனபிறழ்வு ஏற்பட்டாலோ, திவாலானாலோ குடியுரிமை இல்லாவிட்டாலோ தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். எம்பி அல்லது எம்எல்ஏ கட்சி தாவினால், பத்தாம் அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார். கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒருவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951- கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போது ராகுல் காந்தி இந்த பிரிவிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளதால், ராகுல் காந்தி 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் பிரதநிதித்துவ சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்படும் ஒருவர், தண்டனை பெற்ற நாள் முதல் தனது பதவியை இழப்பார். அன்று முதல் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. 2 ஆண்டுகால சிறை தண்டனை காலத்திற்கு பின்னர் மேலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போதைய சூழலில் ராகுல் காந்தி 8 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது.

இதையும் படிங்க:மத்திய அரசுக்கு அழகல்ல.. ராகுல் காந்தியை பார்த்து பாஜக தலைமை பயந்து இருக்கிறது'' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

top videos

    இரண்டு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய சவால் ராகுல் காந்தி முன் உள்ளது. மேல்முறையிட்டில் ராகுலின் தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்தால், தகுதிநீக்கம் ரத்தாகும். சிறை தண்டனையை ரத்து செய்யாமல், தண்டனையை குறைக்க முன் வரும் பட்சத்திலம் ராகுலின் தகுதிநீக்கம் ரத்தாகும்.

    First published:

    Tags: Rahul Gandhi